Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
பாஜக கோட்டப்பொறுப்பாளராக ராஜேஷ் குருசாமி நியமனம்!

பாஜக கோட்டப்பொறுப்பாளராக ராஜேஷ் குருசாமி நியமனம்!

தமிழக பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்துவரும் தொழிலதிபர் ராஜேஷ்குருசாமி-க்கு அக்கட்சியில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாநிலத் தலைமையின் ஒப்புதலோடு மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்விவரம் பின்வருமாறு,

விருதுநகர் மாவட்டம் எரிச்சனத்தம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் இராஜேஷ் குருசாமி. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குரு குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருவதோடு, நவீன விவசாயி என்ற இதழையும் நடத்தி வருகிறார். மாணவப் பருவம் முதலே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலுள்ள இராஜேஷ் குருசாமி, அந்த அமைப்பின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து கட்சிப்பணிக்கு வந்தவர் பாஜக விவசாய அணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் விவசாய அணி மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில், தற்போது விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, தூத்துக்குடி வடக்கு  ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோட்டப்பொறுப்பாளராக மாநிலத் தலைமையின் ஒப்புதலோடு இராஜேஷ் குருசாமியை நியமனம் செய்து அக்கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜக துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இராஜேஷ்குருசாமிக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, தொட்டிய நாயக்கர் சமுதாய தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு rajesh gurusamy thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண