Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
இராஜகம்பள சமுதாய நலச்சங்க உறவுகள் இல்லத்திருமண விழா!

இராஜகம்பள சமுதாய நலச்சங்க உறவுகள் இல்லத்திருமண விழா!

இராஜகம்பள சமுதாய நலச்சங்க உறவுகள் இல்லத் திருமண விழா பொள்ளாச்சி, கரூர், இராசிபுரம் ஆகிய இடங்களில் நேற்று (ஞாயிறு), இன்று (திங்கள்) ஆகிய நாட்களில் சிறப்புடன் நடைபெற்றது. இதில் சமுதாயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதன் விவரம் பின்வருமாறு,

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் இல்லத்திருமண விழா நேற்று (ஞாயிறு 30.11.2025) காலை பொள்ளாச்சி MGR இந்திர பிரஸ்தா மஹாலில் நடைபெற்றது. பொள்ளாச்சி குள்ளக்காபாளையம் மைனர் திரு.கே.வி.மோகன்ராஜ் - திருமதி.எம். வனிதாமணி ஆகியோரது அன்புமகன் எம்.நேதாஜி B.E., - ஆனைமலை, இராமச்சந்திராபுரம் அதிமுக மாவட்டப்பிரதிநிதி திரு.என்.பழனிசாமி - திருமதி பி.மரகதவள்ளி ஆகியோரது அன்புமகள் பி.பிரித்திகா M.B.A., ஆகியோரது திருமணம் தமிழக சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான திரு.பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.  இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


அதேபோல், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டலப் பொறுப்பாளரும், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், குரும்பட்டியைச் சேர்ந்த திரு.என்.இராமசாமி - திருமதி ஆர்.ஜோதிமணி ஆகியோரின் அன்புமகனுமான ஆர்.காளிமுத்து D.C.E., - அரவக்குறிச்சி வட்டம், கொளிஞ்சிவாடி திரு.கே.பிசைமுத்து - திருமதி பி.காந்திமதி ஆகியோரது அன்புமகள் பி.கார்த்திகா ஆகியோரது திருமண வரவேற்பு நேற்று (ஞாயிறு, 30.11.2025) மாலை புங்கம்பாடி அருள்மிகு மொட்டையாண்டவர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் துணைத்தலைவர் ஆர்.பெருமாள், பாண்டியன் ஸ்டோர்ஸ் எஸ்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இன்று (01.12.2025, திங்கள்கிழமை) காலை நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே போடிநாயக்கன்பட்டி ஸ்ரீ விக்னேஷ்வரா நட்சத்திரா மஹாலில் நடைபெற்ற சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலசங்கத்தின் மூத்த உறுப்பினரும், மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், நாகமநாயக்கன்பட்டி திரு.சி.செல்லத்துரை - திருமதி. இந்துராணி ஆகியோரின் அன்புமகள் சி.நிவேதா B.E., M.B.A., - இராசிபுரம் வட்டம், கனகபொம்மன்பட்டி திரு.கே.முருகவேள் - திருமதி.எம். தனலட்சுமி ஆகியோரின் அன்புமகன் எம்.ஜெய்கணேஷ் B.E., (LL.B)., திருமணத்தில் சங்கத்தின் சார்பில் எம்.கணேஷ், சி.மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


இல்லற வாழ்வில் இணையேற்ற தம்பதிகளுக்கு சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு k.t.mohanraj thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண