Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
ஊராட்சி மன்றத் தலைவர் - கமுதி.திரு.அழகர்சாமி

ஊராட்சி மன்றத் தலைவர் - கமுதி.திரு.அழகர்சாமி

திரு.P.அழகர்சாமி அவர்கள் 1961-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழராமநதி கிராமத்தில் திரு.பெருமாள் நாயக்கர் – திருமதி. பெருமாளக்காள் தம்பதிக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி வரை கல்வி பயின்றவர், பின் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணியில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.A.பழனி என்ற மனைவியும், A.பூபதி, A.பூபதிராஜா, A.சூர்யா என்ற மூன்று மகன்களும், A.நந்தினி என்ற மகளும் உள்ளனர்

postgallery(127)


சிறுவயதிலிருந்தே பொதுவாழ்வில் இருந்தாலும், எந்த கட்சியையும் சாராமல் தனி ஆவர்தனம் செய்துவருபவர் திரு.அழகர்சாமி அவர்கள். இராஜகம்பள நாயக்கர் உறவின்முறை சங்கத்தின் டிரஸ்டியாக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகித்து வருகிறார். உள்ளூரில் முக்கிய காரியதர்சியாக உள்ள திரு.அழகர்சாமி அவர்களை சமூக ஆர்வலர் என்றே அப்பகுதி மக்களால் அடையாளப்படுத்தப்படுகிறார். அந்தவகையில் இவரின் கண் அசைவின்றி எதுவும் நடக்காது என்ற அளவில் ஆளுமைமிக்கவராக,உள்ளூரில் நடக்கும் அனைத்து-சுக துக்கங்கள், திருவிழாக்கள், கோவில் விஷேசங்கள் என அனைத்திலும் முன்னின்று சேவையாற்றும் திரு.அழகர்சாமி அவர்களின் ஆலோசனை/கவனத்திற்கு கொண்டுவராமல் உள்ளூர் மக்கள் நிலபரிவர்த்தனை முதல் வருவாய்த்துறை, காவல்துறை, பத்திரப் பதிவுத்துறை, என எதுவும் செய்யமாட்டார்கள் என்ற அளவிற்கு அக்கிராம மக்களின் வாழ்வில் இரண்டரக்கலந்தவர், நம்பிக்கைக்கு பாத்திரமானவர். முழுநேரத்தொண்டராக கிராமத்திற்கு அர்ப்பணித்துக்கொண்டு வாழும் திரு.அழகர்சாமி அவர்கள், அக்கிராமத்தில் வாழும் சுமார் 12-க்கும் மேற்பட்ட சமுதாயத்தினரின் அன்புக்கு பாத்திரமானவர் என்பதுடன் அனைத்து தரப்பு மக்களும் சுமூகமாகவும், இணக்கமாகவும் வாழ பாலமாகத்திகழ்கிறார்.

postgallery(127)

நினைவு தெரிந்த நாளிலிருந்து பொதுவாழ்வில் இருந்தபொழுதிலும் பல்வேறு கட்சிகளிலிருந்து வந்த அழைப்பைப் புறக்கணித்து, கிராம மக்களுக்காக பாடுபட்டு வரும் திரு.அழகர்சாமி அவர்களை 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கீழராமநதி ஊரட்சிமன்றத் தலைவராக மக்கள் தேர்ந்தெடுக்க விரும்பிய பொழுதும் அதை விரும்பாமல் சக நண்பருக்கு அப்பதவியை வழங்கினார். பொதுநல சேவைக்கு பதவி பொருட்டல்ல என்று தன் சேவையை தொடர்பவரை கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கீழராமநதி ஊராட்சி மன்றத் தலைவராக திரு.அழகர்சாமியை போட்டியின்றி தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிட்த்தக்கது. பல்லாண்டுகளாக பொதுசேவையில் தொடரும் திரு.அழகர்சாமி அவர்கள், இப்புதிய அதிகாரத்தின் மூலம் மேலும் சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்குவதுடன், தமிழகம் முழுவதும்  சமுதாயத்திற்கும் பங்காற்ற வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Keelaramanathi President Mr.Aalagarsamy

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண