Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம்.
அதிமுக கவுன்சிலருக்கு சேவா ரத்னா விருது!

அதிமுக கவுன்சிலருக்கு சேவா ரத்னா விருது!

பகிர்:

விருதுநகர் நகரமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.சரவணன் அவர்களின் பொதுநலச்சேவைக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதன் விவரம் வருமாறு,

விருதுநகர் அதிமுக பிரமுகரும், நகர மன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.சரவணன் மிகச்சிறந்த சமூக செயற்பாட்டாளர். நகர மன்ற உறுப்பினராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். ஆளும்கட்சி எதிர்க்கட்சி என எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தன்பகுதி மக்களுக்கான திட்டத்தைக் கொண்டுவந்து செயல்படுத்துவதில் கெட்டிக்காரர் என அனைத்து தரப்பினராலும் பாரட்டப்படுபவர் ஆர்.எஸ்.சரவணன். இவரின் தொடர்ச்சியான மக்கள் சேவையை புலனாய்வு மூலம் ஆய்ந்தறிருந்து காலைப்பதிப்பகம், போலீஸ் ரிப்போர்ட்டர் இதழ்களின் சார்பில் "சேவா ரத்னா" விருதுக்கு பரிந்துரை செய்தன. இதனை ஏற்றுக்கொண்ட விருது வழங்கும் நிறுவனமான 'குளோபல் அச்சீவர்ஸ்" ஆர்.எஸ்.கண்ணனைத் தேர்வு செய்து சென்னை அண்ணாசாலையிலுள்ள தனியார் ஐந்துநட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் விருது வழங்கி கௌரவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.08.2025) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சினிமா இயக்குநர்கள், சின்னத்திரை நடிகர், நடிகையர், பிரபல தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தினர். நாடெங்கிழுமிருந்து பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட இவ்விருதுக்காக விருதுநகர் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே அரசியல் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு R.S.Kannan thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண