Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
போகராஜ் அரண்மனையார் இயற்கை எய்தினார் - கண்ணீர் அஞ்சலி

போகராஜ் அரண்மனையார் இயற்கை எய்தினார் - கண்ணீர் அஞ்சலி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், நரசிங்காபுரம் அரண்மனையார் பழனிச்சாமி எர்ரப்ப கவுண்டர் அவர்களின் மகனும், ஒன்றியக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி சரவணக்குமார் அவர்களின் தந்தையாருமான திரு.போகராஜ் அவர்கள் பொன்னாபுரம் கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் இயற்கை எய்தினார்.

நரசிங்காபுரம் அரண்மனையார் போகராஜ் அவர்களின் மறைவிற்கு கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் மற்றும் அரசியல் கட்சிப்பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், மாவட்டத் தலைவர் குணசேகரன், மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் போகராஜ் அவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அன்னாரது உடலுக்கு இன்று காலை 10 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். போகராஜ் அவர்களின் மறைவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Bogaraj www.thottianaicker.com thottianaicker

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண