Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
அரண்மனையார் பொன்னுசாமி எர்ரப்பகவுண்டர் துணைவியார் இயற்கை எய்தினார் - கண்ணீர் அஞ்சலி

அரண்மனையார் பொன்னுசாமி எர்ரப்பகவுண்டர் துணைவியார் இயற்கை எய்தினார் - கண்ணீர் அஞ்சலி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி-ஆனைமலை (மாசானியம்மன் கோவில்) அருகேயுள்ளது இராமச்சந்திராபுரம் கிராமம். இக்கிராமத்தைச்சுற்றிலும் அமைந்துள்ள பல கிராமங்கள் "எர்ரப்ப கவுண்டர்' வம்சாவளியைச்  சேர்ந்த இராஜகம்பளத்தார் சமுதாய அரண்மனையாரால் நிர்வாகிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற சின்னக்கவுண்டர் திரைப்படம் இங்கு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இராமச்சந்திராபுரம் சின்ன அரண்மனையார் தெய்வத்திரு.பொன்னுசாமி எர்ரப்ப கவுண்டர் அவர்களின் துணைவியாரும், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளர் திரு.முத்துமாணிக்கம் மற்றும் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் திரு.இராஜேந்திரன் (இன்ஸ்பெக்டர்-ஓய்வு) ஆகியோரின் மாமியாருமான திருமதி. மாணிக்கம்மாள் (வயது-84) வயது மூப்பு காரணமாக நேற்று மாலை 5.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

அம்மையாரின் மறைவுக்கு சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணைஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாவட்டத்தலைவர் குணசேகரன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண