Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
மாநகரச் செயலாளர் இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு தலைவர்கள் வாழ்த்து!

மாநகரச் செயலாளர் இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு தலைவர்கள் வாழ்த்து!

மறுமலர்ச்சி திமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் திரு B. முருகபூபதி அவர்களது இல்லத் திருமணவிழாவில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தூத்துக்குடி மாவட்ட வீரபாண்டிய  கட்டபொம்மன் பண்பாட்டுகழக மாவட்டத் தலைவர் வலசை கண்ணன்,  நெல்லை மத்திய மாவட்ட 7 வது வட்ட கழக செயலாளர் மா. மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதன் விவரம் வருமாறு,



தூத்துக்குடி மாவட்டம் கட்டபொம்மன் நகரில் வசித்து வருபவர்கள் திரு.B.முருகபூபதி - திருமதி.பாக்கியலட்சுமி தம்பதியினர். முருகபூபதி  மதிமுக தூத்துக்குடி நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகன் M.இராஜகோபால் B.E., க்கும் தூத்துக்குடி மாவட்டம், சிங்கிலிபட்டியைச் சேர்ந்த தெய்வத்திரு.முருகன்- திருமதி. அய்யம்மாள் ஆகியோரின் மகள் M.அய்யம்மாள் B.Sc ஆகியோரது திருமணம் மதிமுக பொதுச்செயலாளர் மானமிகு வைகோ M.P., அவர்களின் நல்லாசியுடன், தூத்துக்குடி வடக்குமாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் இன்று (27.10.2023)  காலை நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ, துணைப்பொதுச்செயலாளர் திமு.இராஜேந்திரன் மதிமுக தூத்துக்குடி தெற்க்கு மாவட்ட இளைஞர்அணி செயலாளர் சரவணபெருமாள், முன்னாள் இளைஞர் அணிச்செயலாளர், பாலசுப்பிரமணியன்,
மாணவரணி வீரபொம்மு, நெல்லை மத்திய மாவட்ட 7 வது வட்ட கழக செயலாளர் மா. மாரிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தொழிலதிபர் வலசை கண்ணன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.  

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Durai Vaiko thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண