Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
மாண்புமிகு துணை முதல்வருடன்- ஜமீன்தார் திடீர் சந்திப்பு.

மாண்புமிகு துணை முதல்வருடன்- ஜமீன்தார் திடீர் சந்திப்பு.

மாண்புமிகு துணைமுதல்வருடன்- ஜமீன்தார் சந்திப்பு. பொள்ளாச்சி, இராமபட்டணம் ஜமீன்தார் திரு.விஷ்ணு காந்த சக்திவேல் ராஜா அவர்கள் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு .திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தேனியில் சந்தித்தார். 


முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தேனி சென்ற ஜமீன்தார் அவர்கள் அங்கு பிஜேபி-யின் முக்கிய தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களை சந்தித்தார். திடீர் ஏற்பாடாக துணை முதல்வரை சந்திக்க சென்ற பொழுது, துணை முதல்வருக்கு மரியாதை நிமித்தமாக ஜமீன்தார் சால்வை அணிவிக்க விரும்பினார்.


ஆனால் அதை ஏற்க மறுத்த துணைமுதல்வர் ஜமீன்தார் எனக்கு சால்வை அணிவிக்க கூடாது, நான் ஜமீன்தாருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்கிறேன் என்று ஜமீன்தார் திரு.விஷ்ணு காந்த சக்திவேல் ராஜா அவர்களுக்கு சால்வை அணிவித்தார். 


துணைமுதல்வரின் இப்பணிவும், எளிமையும் அங்கிருந்த தலைவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. சந்திப்பின் பொழுது தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஓ.பி.ரவீந்திரநாத் உடனிருந்து வரவேற்றார்.


நிகழ்வின்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்வைக்காக.

தகவல் உதவி: திரு.கே.டி.மோகன்ராஜ்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு மாண்புமிகு துணைமுதல்வருடன்- ஜமீன்தார் சந்திப்பு

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண