Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
த.வீ.க.ப.கழக பொதுச்செயலாளர் தாயார் மறைவு-தலைவர்கள் இரங்கல் செய்தி.

த.வீ.க.ப.கழக பொதுச்செயலாளர் தாயார் மறைவு-தலைவர்கள் இரங்கல் செய்தி.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் மாநில பொதுச்செயலாளரும், திருப்பூர் தி.மு.க பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளருமான க.இராமகிருஷ்ணன் அவர்களின் தாயாரும், திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, தளி ஜல்லிபட்டி கருப்புசாமி அவர்களின் துணைவியாருமான திருமதி.க.கோப்பம்மாள் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று (06.02.2023) இரவு 8.15 மணியளவில் இயற்கை எய்தினார்.

திருமதி.கோப்பம்மாள் அவர்களின் மறைவுக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களின் தாயார் காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைவதாகவும், அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தாயாரை இழந்துவாடும் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், இந்த பேரிழப்பிலிருந்து மீண்டுவர இயற்கை துணை புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், திருமதி.கோப்பம்மாள் மறைவுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சமூகநீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பெ.இராமராஜ், கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளையின் மலைராஜன், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் என்.பவுல்ராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Ramakrishnan thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண