Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
பெற்றோர்களின் அடுத்தடுத்த மறைவால்  குடும்ப தூண்களை இழந்துவாடும் சோகம்.

பெற்றோர்களின் அடுத்தடுத்த மறைவால் குடும்ப தூண்களை இழந்துவாடும் சோகம்.

நமது சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உறுப்பினரும், மண்டல பொறுப்பாளர்களில் ஒருவருமான திரு.யுத்தீஸ்வரன் அவர்களின் தாயாரும், திருநின்றவூர் பகுதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சமுதாய தலைவருமான மறைந்த திரு M.பால்ராஜ் அவர்களின் மனைவியுமான திருமதி. P.குருவம்மாள் அவர்கள் வயது 69 இன்று (05.01.2023) வியாழக்கிழமை  மாலை 04.30 மணிக்கு காலமானார்.

கடந்த ஒருசில வாரங்களுக்கு முன் தந்தையார் பால்ராஜ் அவர்களை இழந்து திரு.யுதீஸ்வரன் குடும்பத்தார் துயருற்று வந்த நிலையில், கண்ணீர் துளிகளின் ஈரம் ஆறும்முன் தாயாரையும் பறிகொடுத்துள்ளது,  மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது. அடுத்தடுத்து குடும்பத்தின் தூண்களாக இருந்த பெற்றோரை இழந்து தவிக்கும் திரு.யுதீஸ்வரன் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி தேற்றிட வார்த்தைகளின்றி தவிக்கின்றோம்.

அண்ணாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும். நண்பர்களுக்கும் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்ணாரின் இறுதி ஊர்வலம்  06.01.2023வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு மேல் எண் 19, 3வது குறுக்கு தெரு,அந்தோனி நகர்,திருநின்றவூர் என்ற முகவரியில் உள்ள அண்ணாரின் இல்லத்தில் இருந்து புறப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு யுத்தீஸ்வரன் thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண