Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சமுதாயத்தின் போர்வாள் சமுதாய மாரிமுத்து (44)  காலமானார்.

சமுதாயத்தின் போர்வாள் சமுதாய மாரிமுத்து (44) காலமானார்.

கோவை மாவட்டம், ஈச்சனாரியைச் சேர்ந்த சமுதாய மாரிமுத்து என்றழைக்கப்படும் திரு.மாரிமுத்து (44) அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் அவரது இல்லத்தில் காலமானார். தமது தந்தையாரைப்போலவே சமுதாயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் என்ற காரணத்தால் சமுதாய மாரிமுத்து என்று அழைக்கப்பட்டார். சமுதாயம் சார்ந்த கூட்டங்கள் எங்கு, எந்த அமைப்பு சார்பில் நடத்தினாலும் அதில் கலந்துகொண்டு தனது முழுமையான ஆதரவினை வழங்குவார். அதேபோல் சமுதாய நிகச்சிகள் அனைத்தையும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி செய்தி அனைவரையும் சென்றடையச் செய்வார்.

தீவிர திராவிட இயக்கப்பற்றாளராகவும், மதிமுக உறுப்பினராகவும் நீண்டகாலமாக பணியாற்றி வந்தவர், சமீபத்தில் மறுமலர்ச்சி மக்கள் மன்றத்தில் இணைந்து சமூகபணியை செய்து வருகிறார். கோவை சிப்காட்டில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த மாரிமுத்து, இன்று அதிகாலை பாத்ரூம் சென்றவர் தவறி விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு சேர்த்துள்ளனர். மரிமுத்து உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அறிவித்தனர்.

சமுதாய பற்றாளராகவும், பொதுநலனில் அக்கறைகொண்டவருமான மாரிமுத்து, பல போராட்டங்களில் கலந்துகொண்டவர். பழனி கணக்கம்பட்டி சுவாமிகளின் தீவிர பக்தராக விளங்கிய மாரிமுத்து, தொடர்ந்து ஆன்மீக சுற்றுப்பயணங்களையும் அடிக்கடி மேற்கொண்டு வந்தவர். மிகுந்த அதிர்ச்சிதரத்தக்க வகையில் இளம் வயதில் மாரிமுத்துவை சமுதாயம் இழந்துள்ளது ஒட்டுமொத்த கம்பளத்தார் சமுதாயத்திற்குமே பேரிழப்பு என்றால் மிகையல்ல. மரிமுத்துவின் திடீர் மறைவால் சமூகம் தனது போர்வாளில் ஒன்றை இழந்துள்ளது. அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர், மறுமலர்ச்சி மக்கள் மன்றத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Samudhaya Marimuthu thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண