Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காலமானார்- ஆழ்ந்த இரங்கல்

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காலமானார்- ஆழ்ந்த இரங்கல்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஜில்லேப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் கிளைத்தலைவருமான திரு.V.ரங்கசாமி (41) அவர்கள்  இன்று (27.06.2022) அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். 

இந்துமுன்னனியில் இணைந்து பொதுவாழ்க்கையைத் தொடங்கிய திரு.ரங்கசாமி அவர்கள், பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஜில்லேப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.ரங்கசாமி, கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபொழுது நேரடியாக களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

சமுதாயத்தில் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட திரு.ரங்கசாமி அவர்கள், இளம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. காலமான திரு.ரங்கசாமி அவர்களுக்கு  கார்த்திகாயினி என்ற மனைவியும், சுபரஞ்சனி, கோவர்த்தினி என்ற இருமகள்கள் உள்ளனர்.

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், ஜில்லேப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி மக்களுக்கும் அழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு RANGASAMY thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண