Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
நட்சத்திர ஹோட்டலில் தலைவர் இல்ல விழா! தலைவர்கள் நேரில் வாழ்த்து!

நட்சத்திர ஹோட்டலில் தலைவர் இல்ல விழா! தலைவர்கள் நேரில் வாழ்த்து!

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவரும், தொழிலதிபருமான திரு.S.இராதாகிருஷ்ணன் - திருமதி R.இந்திராணி ஆகியோரின் மகள் செல்வி.S.சிவவர்னிகா-வின் மஞ்சள் நீராட்டுவிழா நேற்று மாலை டாக்டர்.இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. 

இதில் வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் M.முருகபூபதி துணைவியாரோடு கலந்துகொண்டார். மேலும், தூத்துக்குடி A.R.ஜுவல்லரி உரிமையாளரும், பர்பிள் கிளப் (ரூ.200000/-) நன்கொடையாளருமான திரு.லட்சுமணன், எஸ்டேட் உரிமையாளர் கம்பம் திரு.மல்லையாசாமி, சின்னுச்சாமி மற்றும் தூத்துக்குடி மாவட்ட உறவுகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மூத்த தலைவர்கள் ஆசிரியர் நல்லையா, ராமசாமி (A.S.P Rtrd) , சுப்பையா, துணைத்தலைவர் பெருமாள், பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், பொருளாளர் எஸ்.இராமராஜ், பர்பிள் கிளப் உறுப்பினர்கள் தொழிலதிபர் துரைசாமி, ஆடிட்டர் நாராயணன், நன்கொடையாளர்கள் கந்தசுப்புராஜ், ஜெயகிருஷ்ணன், தொழிலதிபர் முத்துசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம், சுப்பிரமணியன், ஆண்டிமுருகன், ரவுண்ட் பில்டிங் முருகன்,குருசங்கர்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் கலந்துகொண்ட ஆலயக்குழு தலைவர் முருகபூபதி அவர்களிடம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் சித்திரை மாதத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து, மிகுந்த எழுச்சியுடனும், அசம்பாவிதங்கள் ஏதுமின்றியும் நடத்திமுடித்தமைக்காக மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வந்திருந்த பலரும் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டது சிறப்பம்சமாக இருந்தது.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Radhakrishnan thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண