Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
பண்பாட்டுக்கழக மாநில பொருளாளர் துணைவியார் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

பண்பாட்டுக்கழக மாநில பொருளாளர் துணைவியார் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

திருமதி.மோகனசுந்தரி அவர்களின் மறைவுக்கு சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநில பொருளாளர் ஆருயிர் அண்ணன் திரு.K.பாண்டியன் அவர்களின் துணைவியார் திருமதி.மோகனசுந்தரி அவர்கள் இன்று (11-05-2022) அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 

ஒருசில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் மாநிலப்பொருளாளராக பதவியேற்றுக்கொண்ட அண்ணன் திரு.பாண்டியன் அவர்கள், சமுதாயப்பணிக்காக தன்னை முழுவீச்சில் தயார்படுத்திக்கொண்டு, சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணித்துள்ள இந்தவேளையில், அண்ணன் பாண்டியன் அவர்களின் பணிக்கு அண்ணியார் திருமதி.மோகனசுந்தரி அவர்கள் உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தபொழுது, தலையில் இடி இறங்கியதுபோல் ,ஈரோட்டிலுள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிவரும் அண்ணியார் திருமதி.மோகனசுந்தரி அவர்கள் இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானது அதிர்ச்சியளிக்கிறது. திருமதி.மோகனசுந்தரி அவர்களின் இழப்பு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், சமுதாயத்திற்கும் பேரிழப்பு.

தீவிர சமுதாய செயல்பாட்டாளரான அண்ணன் பாண்டியன் அவர்களுக்கு காலம் ஏற்படுத்திய இந்த கடினமான சோதனையிலிருந்து மீண்டுவர எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியட்டும். அம்மையாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், சுற்றத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை சென்னை வீ.க.பொ. இராஜகம்பளசமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அன்னாரது ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Radhakrishnan thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண