Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி நாயகி! - திருமதி.மலர்க்கொடி

நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி நாயகி! - திருமதி.மலர்க்கொடி

திருமதி.மலர்க்கொடி அவர்கள் 06.02.1986-இல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகேயுள்ள புதூரில் திரு.மாரிச்சாமி- திருமதி.வசந்தி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார்.  இவர் இடைநிலை வரை கல்வி பயின்றுள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த திரு.அலெக்ஸ்  பாண்டியன் அவர்களை மணமுடித்துள்ளார்.

திரு.அலெக்ஸ் பாண்டியன் (37) புதூர் கிராமத்தில் திரு.அப்பைய நாயக்கர்- திருமதி. சின்னமாரியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வி வரை பயின்றவர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். 

இலகுரக மற்றும் மகிழுந்து வாகன ஓட்டுனராகவும் பணியாற்றும் திரு.அலெக்ஸ்பாண்டியன் பரம்பரை அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். வார்டு செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமுள்ளவர் தற்பொழுது அதிமுக மாவட்ட பிரதிநிதி பொறுப்பு வகித்து வருகிறார். 

கடந்த பிப்ரவரி'19-ஆம் தேதியன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதூர் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 12-வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தேர்தல் களம் கண்ட முதல் வாய்ப்பிலேயே வெற்றிவாகை சூடியுள்ளார் திருமதி.மார்க்கொடி அவர்கள் தொடர்ந்து அரசியல் களத்தில் அடுத்தடுத்த வெற்றிகளை அடைய வேண்டுமெனவும், எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து தொடர்ந்து மக்கள் பணியை சிறப்புடன் செய்திட வேண்டுமெனவும் வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mrs.Malarkodi Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண