Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
நலச்சங்கத்தின் நன்கொடையாளர் ஈச்சனாரி பாலு காலமானார் - ஆழ்ந்த இரங்கல்

நலச்சங்கத்தின் நன்கொடையாளர் ஈச்சனாரி பாலு காலமானார் - ஆழ்ந்த இரங்கல்

சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், சிறந்த சமுதாயப்பற்றாளருமான ஈச்சனாரி பாலு (எ) V.பாலசுப்பிரமணியம் (77)இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவை ஈச்சனாரியிலுள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். கோவையில் நிதிநிறுவனம் நடத்திவந்த திரு.பாலசுப்பிரமணியம் சுசி பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்தார். இவர் சமூகசேவகி திருமதி.கௌரி சுரேஷ் அவர்களின் சிறிய தந்தை என்பதும், சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் "பர்பிள் கிளப்" உறுப்பினர் (ரூ.200000/- அதிகமாக நன்கொடை வழங்கியோர்) திருமதி.லதா நஞ்சுண்டகுமார் அவர்களின் தாய்மாமன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்பிற்கு இலக்கணமாய்

அவனியில் வாழ்ந்து

பண்புடைமை காத்து

பக்குவமாய் வழி நடந்தீர்

ஈகை பல செய்து

எல்லோருக்கும்

நல்லவராய் நாணயமாய்

நடந்தீர்

ஏனோ இறைவன் இடை

நடுவில்

பறித்து விட்டான்

துன்புற்றோர் துயர் துடைத்து

துணைக்கரமாய் அடைக்கலம்

தந்த உம்மை

ஆண்டவன் ஏனழைத்தான்

பண்புள்ளோரை பல காலம்

வாழவிடக் கூடாதென்றோ ?

என் செய்வோம்

இறைவன் சித்தம் இது

இனி காணமுடியாத

சோக நிலையோடு

இங்கிருந்தே ஏங்கியழகிறோம்.

அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு balakrishnanan thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண