தொழிலதிபர்கள்

  • 21,126 visitors

தொழிலதிபர்கள்

தொட்டிய நாயக்கர் இனத்தைப் பற்றி எழுதப்படும் எந்த வரலாற்றிலும் மாமன்னர்கள், அரசர்கள், பாளையக்காரர்கள் ஜமீன்தார்கள், பெருநிலக்கிழார்கள், கிராமமுன்சீப், ஊர் நாட்டாமை என அதிகாரவர்க்கமாக இருந்துள்ளதை குறிப்பிடாமல் கடந்து செல்ல முடியாது. தேசம் ஜன நாயகத்தைக் கண்டிராதவரையில், காலத்திற்கேற்பதங்கள் ஆதிக்கத்தைதக்க வைத்துதிருந்தனர். அதே வேளையில் சுதந்திரத்திற்குப் பின் ஜனநாயகத்திற்க்குப் பின்னான அரசின் போக்கையும், ஜனநாயகம் ஏற்படுத்தியமாறு தல்களையும், ஆதிக்கத்தை செலுத்த தேவையான முன்னெடுப்புகளையும், நமக்கு முன் வாழ்ந்த இரண்டு தலைமுறை முன்னோர்கள் (சரியாக சொல்ல வேண்டுமெனில், கொள்ளுத்தாத்த காலம் முதல்) கணிக்க தவறவிட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

தேசவிடுதலைக்குப் பின், அரசியல், கல்வி, தொழில் என இந்த மூன்று துறைகளில் கால் பதித்த சமூகங்களே, அரசில் ஆதிக்க சமூகமாக இருப்பதை காண்கிறோம். இத்துறைகளை தவறவிட்டதின் விளைவு, விவசாயம் பொய்த்துப் போனபின் பெரும்பாலான தொட்டிய நாயக்கர் குடும்பங்கள்தங்கள் சமூக அந்தஸ்தை இழந்து, படுபாதாள பொருளாதர சூழலில், தங்களை நிலை நிறுத்திக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது. சமூகத்தை சற்று உற்று நோக்கினால், கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு (கடந்ததலைமுறை) முன் தொழில் துறையில் தடம் பதித்த சமுதாயங்கள் இன்று பொருளாதாரத்தில் உச்ச நிலையில் இருப்பதைபார்க்கிறோம். அந்தசமுதாயங்களில், ஒரு சிலர் மட்டும் தொழில் துறையில் முன்னேறாமல் ஒட்டு மொத்த சமுதாயமாக முன்னேறியதின் விளைவாக, சில வேளைகளில் தொழிலில் ஏற்படும் நஷ்டங்களால், சரிவுகளால் ஒரு சிலர் சறுக்கினாலும், ஒரு சிலவருடங்களில் மீண்டும் தங்களை கட்டமைத்துக் கொள்கிறார்கள். இந்த சறுக்கள்கள்வாரிசுகளின் கல்வி, திருமணம் போன்ற சமூக அந்தஸ்தை தீர்மானிக்கும் விசயங்களில் எந்தவித பாதிப்பதையும் ஏற்படுத்துவதில்லை. இதை தான் சமுதாயத்தில் உள்ள “ஆரோக்கியமானசூழல்” என்கிறோம்.

தொட்டிய நாயக்கர் சமூகத்தில் இன்றைய தலைமுறையினர் கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கிய போதிலும், தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து காணப்படுகிறது. பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டப்படிபை முடித்து, சகோதர, சகோதரிகள் கல்வி, திருமணம், வீடுபோன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதாலும்,  தொழில் தொடங்க தேவைப்படும் அடிப்படை நிதியாதாரம், கால அவகாசம், தொழிலுக்கே உண்டான “ரிஸ்க்” போன்ற காரணிகள் பெரும் தடையாகஉ ள்ளது. இந்த அடிப்படைதடைகளையெல்லாம் தாண்டி ஒரு சிலர் தொழில் துறையில் வெற்றி பெற்றுள்ளது உண்மையில் மகிழ்ச்சியைத்தந்தாலும், போதுமானதல்ல. ஏனெனில், நம்மின ஒட்டுமொத்த மக்கள் தொகையில் குறைந்தபட்சம், 70 சதவீதம் பேர்தொழில் துறையில் சாதிக்கும்ட்சத்தில் மட்டுமே “ஆரோக்கியசூழலை” ஏற்படும். இந்த ஆரோக்கியசூழலே தொழில்துறையில் இருப்பவர்கள் மேலும் புதிய முயற்சிகளில் இறங்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட தொழிகளில் கவனம் செலுத்திடஉதவும். அந்த நிலையை நோக்கி இச்சமுதாயத்தை கொண்டு செல்வது இப்பொழுது வாழும் ஒவ்வொருவரின் கடமை. இதை நாம் செய்யத் தவறுவது, நாளைய தலைமுறை இந்த காலகட்டத்தில் இதைச் செய்திருக்கவேண்டியவர்கள், காலச்சூழலுக்கேற்ப இந்த சமுதாயத்தைக் கட்டமைக் கதவறியவர்கள் என்று வருங்கால தலைமுறையினரின் பலிச்சொல்லுக்கு நாம் ஆளாவோம்.

ஆதலால் எந்தத் துறையினருக்கும் இல்லதா சிறப்பும், பொறுப்பும், இன்று தொழில்துறையில் இருக்கும் “கம்பளத்து தொழிலதிபர்களுக்கு” உண்டு. தொழில்துறையில் சாதிக்கும் கம்பளத்தார்களை அடையாளம்கண்டு, அவர்களை பொதுவெளியில் அறிமுகம் செய்வது,  தொழில்துறையில் தடம் பதிக்ககாத்திருக்கும் புதியவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும். மேலும் தொழிலதிபர்களுக்கும், சமுதாயத்திற்குமான இடைவெளி குறைவதுடன், புதியவர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் சமுதாயத்தில் பயன்படுத்தாமல் முடங்கியுள்ள நிதியாதரங்களை தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்து, அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, சமுதாயத்தின் ஆதரவையும் பெற்றுத்தந்திட இந்த தொழிலதிபர்கள் பக்கம் உதவும் என நம்புகிறோம்.

எங்களுக்கு கிடைத்த ஒரு சிலரை மட்டுமே தொடக்க நிலையில் பட்டியலிட்டுள்ளோம். இன்னும் பலரை இப்பக்கத்தில் இடம் பெற செய்ய வேண்டும். அவர்களை பற்றிய விபரங்களை புகைப்படம் மற்றும் அவர்களின் சேவைகள் பற்றிய சிறுகுறிப்புகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

“உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள்” நம்ம வீட்டுத் தொழிலதிபர் “சுகப்பிரியா” திரு.S.இராமராசு

“உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள்” நம்ம வீட்டுத் தொழிலதிபர் “சுகப்பிரியா” திரு.S.இராமராசு

திரு.S.இராமராசு அவர்கள் 10.06.1958-ல், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் திரு.சுந்தரப்ப நாயக்கர்- திருமதி.பெருமாளம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.  மேல்நிலைக்கல்வி வரை பயின்றவர்,...
Read More
உழைப்பால் உயர்ந்த உத்தமர் நம்ம வீட்டு தொழிலதிபர் வலசை.திரு.கண்ணன்

உழைப்பால் உயர்ந்த உத்தமர் நம்ம வீட்டு தொழிலதிபர் வலசை.திரு.கண்ணன்

வலசை.திரு.V.கண்ணன் அவர்கள் 21.07.1972-ல் தென்காசி மாவட்டம் (முன்பு திருநெல்வேலி மாவட்டமாக இருந்தது), கடையநல்லூர் அருகேயுள்ள வலசை எனும் கிராமத்தில் திரு.வேலுச்சாமி நாயக்கர் – திருமதி. சண்முகத்தாய் அம்மாள்...
Read More
உழைப்பால் உயர்ந்த உத்தமர் “நம்ம வீட்டு தொழிலதிபர்” பெருந்துறை.P.பழனிச்சாமி.

உழைப்பால் உயர்ந்த உத்தமர் “நம்ம வீட்டு தொழிலதிபர்” பெருந்துறை.P.பழனிச்சாமி.

                  திரு.P.பழனிச்சாமி அவர்கள் 17.12.1978-ல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை  அருகேயுள்ள சீனபுரம் கிராமத்தில் திரு.பழனிச்சாமி-திருமதி.மாரக்காள் தம்பதியினருக்கு...
Read More
உழைப்பால் உயர்ந்த உத்தமர் “நம்ம வீட்டு தொழிலதிபர்” பெருந்துறை.P.கண்ணுசாமி

உழைப்பால் உயர்ந்த உத்தமர் “நம்ம வீட்டு தொழிலதிபர்” பெருந்துறை.P.கண்ணுசாமி

                  திரு.P.கண்ணுசாமி.B.Com., அவர்கள் 24.01.1977-ல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள சீனபுரம் கிராமத்தில் திரு.பழனிச்சாமி-திருமதி.மாரக்காள் தம்பதியினருக்கு...
Read More
திரு.விஜயன்

திரு.விஜயன்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்திலுள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் பிறந்த திரு. விஜயன் தனது சொந்த உழைப்பால் முன்னேறி பாஞ்சை பால் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
Read More

விளம்பர காட்சி பகுதி