தியாகிகள்

  • 5,739 visitors

தியாகிகள்

"இன்னவா றடலாற்றி இவர்ஏறி

 வருந்திறலை இகல்வெஞ் சேனை

மன்னனறிந் துளங்கொதித்து மருவியயல்

நின்ற இனத் தலைவர் தம்மை

உன்னரிய பரிப்படையும் உயர்படையும்

ஒருமுகமாய் ஒருங்கே யூக்கிச்

சின்னபின்ன முறச்செய்து செருவாற்றும்

எனச்சீறிச் சினந்து நின்றார்கள்தியாகிகள்"

அவர்கள் புகழ் வாழ்கவே...

தியாகிகள் பக்கத்தில் சமுதாயத்திற்காக பாடுபட்ட தீரர்களை நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறோம். தொட்டியநாயக்கர் சமுதாய வரலாற்றில் ஜமீன்தார்களும், பெருநிலக்கிழார்களும் கோலோச்சிக்கொண்டிருந்த நேரத்தில், சமுதாயத்திற்கென்று ஒரு சங்கத்தை முதன்முதலில் சுதந்திரத்திற்கு முன் 1939-ல் தொடங்கிவைத்து, சமுதாய சேவை அவசியம் தேவை என்ற நிலையை உருவாக்கிய வலுக்கலொட்டி. மைனர்.திரு. பெருமாள்நாயக்கர் அவர்கள்.

            இதை அடியொட்டி சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் ஒன்றிணைந்து சங்கங்கள், கல்வி அறக்கட்டளைகள் என பல்வேறு அமைப்புகளை தொடங்கியும், பலர் தங்களை அவ்வமைப்புகளில் இணைத்துக் கொண்டும், மற்றொரு பிரிவினர் அரசு வேலைகளில் இருந்து கொண்டும், சிலர் தனிப்பட்ட முறையிலும் என ஒவ்வொரு வரும் பல்வேறு நிலைகளில் இருந்து சமுதாயப் பணியை எந்தவித பிரதி பலனுமில்லாமல் இந்த சமுதாயத்திற்கு சேவையாற்றி வந்துள்ளனர்.

            அப்படியாக சிலர் தான், தன் குடும்பம் என்று வாழாமல், இந்த சமுதாயத்தை தன் குடும்பமாக நினைத்து, குடும்பம் துறந்து, சுக துக்கம் மறந்து, பொருளாதாரம் இழந்து, உழைத்ததே, முற்றிலும் வீழ்ந்துவிட்ட இச்சமூகம் மீண்டும் துளிர்விட்டு நம்பிகையளிக்க மூல காரணம் என்றால் மிகையல்ல. மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள், பெருநிலக்கிழார்கள் என படிப்படியாக வீழ்ச்சியுற்ற சமுதாயம், சுதந்திரத்திற்குப் பின்  விவசாயமும் கைவிட்டபின், நாதியற்று கிடந்த சமுதாயத்தை, தங்களின் தனிப்பட்ட செல்வாக்கினாலும், பொருளாதார உதவியாளும், ஆளுகின்ற அரசின் கவனத்தை ஈர்த்து, இடஒதுக்கீடு, மாவீரனுக்கு கோட்டை, நினைவுச் சின்னம், சிலை, தபால்தலை, மாவட்டத்திற்கு பெயர்சூட்டல் என இன அடையாளங்களை மீட்டெடுத்ததால் மட்டுமே இன்று சொற்ப அளவிலாவது கல்வி, வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியதுடன், சமூகத்தில் சமுதாயத்தின் அந்தஸ்தை இழக்காமல் கௌரவமாக நாம் வாழ முடிகிறது.

நம் ஒவ்வொருவரின் வெற்றியிலும் அவர்களின் உழைப்பும், வேர்வையும் மறைந்துள்ளதை, இன்றைய நாகரீக சமூகத்தில் வாழும் நாம் நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டும். எதற்காக அவர்கள் எந்த பிரதி பலனும் பாராமல் இந்த சமுதாயத்திற்காக உழைத்தார்களோ, அதை இன்று அனுபவித்துக் கொண்டு வாழும் நாமும் இச்சமுதாயத்தின் விளிம்பு நிலை மனிதர்களுக்கு உதவுவதின் மூலம், நாமும் இவ்வுலகில் வாழ்ந்ததிற்கான அடையாளத்தை ஏற்படுத்த முடியும்.

தன்னலமற்ற உழைப்பும், சேவையும் ஒருநாளும் வீண்போகாது என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த தியாகிகள் பக்கம் திகழ்கிறது. ஆம், அவர்கள் வாழ்ந்து மறைந்து பல ஆண்டுகள் இருந்திருக்கலாம். தங்கள் மறைவுக்குப் பின் இச்சமுதாயம் நினைவில் கொள்ளும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருந்திருக்கலாம். ஏன், அவர்கள் குடும்பத்தினர், வாரிசுகள் கூட மறந்திருக்கலாம், ஆனால் இந்த சமுதாயம் மறக்கவில்லை என்பதை பறைசாற்றுகிறது இந்த தியாகிகள் பக்கம் என் பதில் பெருமை கொள்கிறோம். தகவல் தொழில் நுட்பம் வளராத அன்றையகாலத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே பத்திரிக்கைகள் மற்றும் தொடர் பயணங்கள் மூலம் சமுதாய அறிமுக வெளிச்சம் கிட்டியிருக்கும். குக்கிராமங்களில் வாழ்ந்து சமுதாய பணியாற்றிய பலரின் சேவைகள் இந்த உலகிற்கு இதுவரை தெரியாமலே இருந்திருக்கும். அவர்களின் சேவைகளையெல்லாம் போற்றி, நினைவு கூர்ந்து இந்த தியாகிகள் பக்கத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என்பதே பிரதானநோக்கம்.

எங்களுக்கு கிடைத்த ஒரு சிலரை மட்டுமே தொடக்க நிலையில் பட்டியலிட்டுள்ளோம். இன்னும் பலரை இப்பக்கத்தில் இடம் பெற செய்ய வேண்டும். அவர்களை பற்றிய விபரங்களை புகைப்படம் மற்றும் அவர்களின் சேவைகள் பற்றிய சிறுகுறிப்புகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்
திரு.வையப்பநாயக்கர்
திரு.பெருமாள் நாயக்கர்
திரு.பா.இராமசாமி
திரு.S.K முத்தையா B.A.,
திரு.சீனிகுருசாமி, B.A.,
திரு.திம்ம நாயக்கர்
திரு.சுப்பா நாயக்கர்
திரு.ரங்கசாமி நாயக்கர்
திரு.சோலையப்ப நாயக்கர்
திரு.நடராஜ் நாயக்கர்
திரு.பவுன் நாயக்கர்
திரு.டி.எம்.ராஜண்ணன்
திரு.K.N.ரெங்கநாதன்
திரு.வை.பாலுச்சாமி நாயக்கர்
திரு.வை.ஜெயராஜ் Ex.DSP
திரு.முத்து நாயக்கர்
திரு.முருகையா
திரு.க.சுப்பு B.A.B.L
திரு.மு.சுந்தரராஜன் Ex.MLA
திரு.மல்லையசாமி நாயக்கர்
திரு.சின்னம நாயக்கர்
திரு.முத்தையா நாயக்கர்
திரு.கிருஷ்ணசாமி நாயக்கர்
திரு.திருப்பதி நாயக்கர்
திரு.R.ராஜாராம்
திரு.வீரபொம்மு
திரு.எம்.நல்லப்பன், B.E.,
திரு.கே.ரங்கசாமி.Bsc.,
திரு.R.பாலுசாமி நாயக்கர்
திரு. ஶ்ரீ. இராஜகோபால்சாமி
திரு.திக்விஜயசாமி
திரு.பொன்னுசாமி நாயக்கர்
திரு.கோதண்டராமன்
திருமதி.ராஜாமணி முத்துசாமி
TBU
குறிப்பு:

தியாகிகள் பற்றிய அனைத்தும் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இங்கே தொகுத்துள்ளோம். அதே வேளையில் பட்டியல் முழுமையானது அல்ல. மேலும் தியாகிகள் பற்றிய விவரங்கள், செய்திகள், புகைப்படங்களை அனுப்பும்பட்சத்தில் திருத்திக்கொள்ள / புதுப்பித்துக்கொள்ள தயாராக உள்ளோம்.
விளம்பர காட்சி பகுதி