சமூக – சமுதாய ஆர்வலர்கள்

  • 21,126 visitors

சமூக-சமுதாய ஆர்வலர்கள்

“பாரெல்லாம் ஒளிபரப்பிப் பல்லுயிரும் பணியாற்றப் பகல்செய் தாற்றி நீரெல்லாம் ஓய்ந்திருமென் றருள்புரிந்து நெறிசெய்து நீங்கி நேரே ஏரெல்லாம் எய்திநின்ற ஒருதலைவன் ஆர்வலரை யிருத்தித் தான்போய்ச் சீரெல்லாம் செறிந்தமனை சேர்ந்ததுபோல் செங்கதிரோன் மேல்பால் சேர்ப்பான் சமூக−சமுதாய ஆர்வலன்”

தொட்டிய நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அரசியல் கட்சிகள் தவிர்த்து, தன்னார்வ அமைப்புகள், லயன்ஸ்கிளப். ரோட்டரி கிளப், கல்வி அறக்கட்டளைகள் போன்ற தொண்டு நிறுவனங்களில் இணைந்து சமூக பணியாற்றுபவர்களையும், இனத்தின் மீதான தீராபற்றால், சமுதாயத்தினரிடையே ஒற்றுமையையும், இணக்கத்தையும், அரசியல், கல்வி, பொருளாதார விழுப்புணர்வையும், எழுச்சியையும், ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், எந்தவித பிரதி பலனும் பாராது, குடும்பத்தையும், பொருளாதார இழப்புகளையும், பொருட்படுத்தாது, பல்வேறு அமைப்புகளை தொடங்கியும், பிற அமைப்புகளில் இணைத்துக் கொண்டும், பணியாற்றி வருபவர்களை அடையாளம் கண்டு. இந்த பக்கத்தில் அறிமுகபடுத்துவதில் பெருமிதம் கொள்கின்றோம்.

டிஜிடல் தொழில்நுட்பத்தின்மூலம் நம்மின சமூக-சமுதாய ஆர்வலர்களை உலகம் தழுவிய அளவில் பொது வெளியில் அறிமுகப்படுத்தி, ஆவணப்படுத்துவதின் மூலம் அவர்களின் உழைப்புக்கும், சேவைக்கும் உரிய அங்கீகரம் கிடைத்திட செய்ய முடியும். எந்த சேவையையும், சமூகம் உரியமுறையில் அங்கீகரிக்கையில், அவர்களுக்கு மேலும் சாதிக்க வேண்டும் என்ற உந்துதலும், அவர்களின் காலத்திற்குப் பின்னரும் தங்களின் சேவை பேசப்படும் என்ற மனநிறைவும், இளம் தலைமுறையினர் மற்றும் வருங்கால தலைமுறையினருக்கு சமுதாய சேவை மீதான ஆர்வத்தையும் தூண்டிட உதவும், இதனால் அவர்களின் வாரிசுகளுக்கும், இனத்திற்கும் உரிய பெருமையை வரும் காலங்களில் பெற்றுத் தரும் என்று நம்புகிறோம்.

எங்களுக்கு கிடைத்த ஒரு சிலரை மட்டுமே தொடக்க நிலையில் பட்டியலிட்டுள்ளோம். இன்னும் பலரை இப்பக்கத்தில் இடம் பெற செய்ய வேண்டும். அவர்களை பற்றிய விபரங்களை புகைப்படம் மற்றும் அவர்களின் சேவைகள் பற்றிய சிறு குறிப்புகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பும் படி அன்புடன்கேட்டுக் கொள்கிறோம்.

சமூக – சமுதாய ஆர்வலர்கள் திரு.G.கணேசமூர்த்தி

சமூக – சமுதாய ஆர்வலர்கள் திரு.G.கணேசமூர்த்தி

திரு.G.கணேசமூர்த்தி அவர்கள் 07.05.1984-ல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள காத்தான்பட்டி கிரமத்தில் திரு.குமரய்யா - திருமதி.பாண்டியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் நடுநிலைப் பள்ளி...
Read More
சமுதாய தலைவர்கள் திரு.பெருமாள் நாயக்கர்

சமுதாய தலைவர்கள் திரு.பெருமாள் நாயக்கர்

திரு.பெருமாள் நாயக்கர் அவர்கள் 1932 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தில், உயர்திரு, கஞ்சையை நாயக்கர், திருமதி ராமக்கம்மாள் தம்பதிகளுக்கு...
Read More
திரு.ந.நல்லையா

திரு.ந.நல்லையா

திரு.ந.நல்லையா அவர்கள் 1942 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா சக்கரப்பநாயக்கனூர் கிராமத்தில் திரு.B.நல்லையா திருமதி.அழகம்மாள் தம்பதியினருக்கு மகனாகப்பிறந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் துளசிராம்,...
Read More
திரு.சி.முத்துசாமி.B.A.,B.L.,

திரு.சி.முத்துசாமி.B.A.,B.L.,

திரு.சி.முத்துசாமி.B.A.,B.L.,      திரு.சி.முத்துசாமி.B.A.,B.L., அவர்கள் 16.03.1959-ல் கோயம்புத்தூர் அருகேயுள்ள  ஈச்சனாரியில் திரு.சின்னசாமி திருமதி. ராஜம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர் ஈச்சனாரியில் “ஊர் நாயக்கர்” குடும்பத்தைச்...
Read More
திரு.சிவக்குமார் மயில்சாமி

திரு.சிவக்குமார் மயில்சாமி

திரு.சிவக்குமார் அவர்கள் திரு.மயில்சாமி – திருமதி.மயிலாத்தாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1974 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் ஈச்சனாரியில் பிறந்தார். இவருக்கு திருமதி.சுமதி என்ற மனைவியும், விஜய் என்ற...
Read More

விளம்பர காட்சி பகுதி