அரசியல் பிரபலங்கள்

  • 5,755 visitors

அரசியல் பிரபலங்கள்

“வாள் வலி(மை)போய் வேல்வலி(மை)போய் வன்பரியா

திகள்வலி(மை)போய் மருவி நின்ற

ஆள் வலி(மை)போய்க் கேள்வலிபோய் அடுபகைவர்

கொடுவிரகால் அல்லற் பட்டு

மாள்வலி(மை)யாய்       நின்றாலும்       மன்னியவுன்

துணைநினைந்தே மகிழந்திருந்தோம்

தோள்வலி(மை)யாய் நின்றஎன்றன் துணையே! இன்று

உனைஇழந்தோம்; தொலைத்தோம் எல்லாம்”

தொலைத்த உனைமீட்டெடுக்க தொடங்கினோம் பயணத்தை…!

 

பாராளுமன்ற ஜனநாயகத்தில் அரசை இயக்கும் அச்சாணியாக இருப்பது அரசியல். அரசின் ஒவ்வொரு நகர்விலும் அரசியல் ஒழிந்துள்ளதை நாம் அறிவோம். வரலாற்றில் கிபி 13ஆம் நூற்றாண்டில் கம்பள பேரரசாகஆரம்பிக்கப்பட்டு, பின்பு விஜயநகர சாம்ராஜ்ஜியம் தொடங்கியது முதல் 20 ஆம் நூற்றாண்டின் மத்தியம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலம் வரை மாமன்னர்களாக, அரசர்களாக, சிறு-குறுநில மன்னர்களாக, பாளையக்காரர்களாக, ஜமீன்தார்களாக, அரசை தலைமையேற்று வழிநடத்தும் சமுதாயமாக நாயக்கர் சமுதாயம் இருந்துள்ளது என்பது வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை.

அப்படிப்பட்ட ஒரு சமுதாயம் இந்திய சுதந்திரத்திற்குப் பின். கடந்த எழுபதுவருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக. தன் வலுவை இழந்து இன்று அரசியலில் முகவரியற்றிருப்பது வேதனையானதும், கசப்பானதுமான உண்மை. நம் முன்னோர்கள் காலங்கள் போர்க்களமானது, அதில் அவர்கள் பராக்கிரமசாலிகளாக விளங்கி, சுமார் 670 வருட ஆட்சியை, அரசியலை தங்கள் கைக்குள் வைத்துருந்தனர். ஆனால் கடந்த மூன்று தலைமுறையாக அதுபடிப்படியாக குறைந்து இன்று சூனியத்தில் நின்று அரசியல் செய்கின்றோம். இந்த நிலையை எண்ணி ஒவ்வொரு கம்பளத்தாரும் வெட்கப்படவேண்டும். சமுதாயத்தில் தன்னைத் தானே பெரியநபராக எண்ணிக் கொள்பவர்களும், சாதித்துவிட்டதாக நினைப்பவர்களும், அரசு, அரசியல் என்று வரும் பொழுது செல்லாக்காசாக இருப்பது வெட்ட வெளிச்சமாகவுள்ளது.

சுதந்திரத்திற்குப்பின் கடந்த 50 ஆண்டுகளாக தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் அரசிடம் வைக்கும் பிரதான கோரிக்கை மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்பதே. அது இன்று வரை நிறைவேறாமல் வெற்று அறிவிப்புகளாகவே இருப்பது அரசியலில் நமது சமுதாயத்தின் ஆளுமை வெற்றிடமாக இருப்பதை அம்பலப்படுத்துகிறது.

அரை நூற்றாண்டுகள் கடந்தும், அரசியல் ஆளுமைகளை உருவாக்க முடியாத சமுதாயமாக இருப்பது அவமானகரமானது. அரசியலில் பயணிக்கும் கம்பளத்தார்கள், இந்த இழிநிலையை உணர்ந்து செயல்பட்டு, தங்கள் ஆளுமைகளை உயர்த்திக் கொள்வதுடன், சமுதாயத்தையும் உயர்த்திட முன்வர வேண்டியது அவசியம். இந்த லட்சியத்தை அடைந்திட, அரசியல் பொதுவாழ்வில் பயணிப்பவர்களுக்கு உறுதுணையாக, எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில், அவர்கள் பின்னால் அணிவகுத்து, சமுதாயத்தில் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கிட வேண்டியது தொட்டிய நாயக்கர் இனத்தில் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமை. இதைக் கருத்தில் கொண்டு, இன்று பல்வேறு கட்சிகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பொறுப்பிலுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து, அவர்களின் அரசியலை டிஜிடல் தொழில்நுட்பத்துடன் இணைத்து, அவர்களின் திறமை, சேவை, ஆளுமைகளை உலக அளவில் சமுதாயத்திற்கும், சமூகத்திற்கும் பொதுவெளிப்படுத்தி, அரசியலில் அவர்களுக்கான வாய்ப்புகளை பிரகாசப்படுத்திடவும், கம்பளத்தார் சமுதாயத்தினரின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பிடும் நோக்கிலும் இந்த”அரசியல்பிரபலங்கள்” பக்கம் செயல்படும்.

எனவே, அரசியலில் பயணிக்கும் தொட்டிய நாயக்கர் இனசொந்தங்கள் தங்களைப் பற்றிய சுயவிபரங்களை [email protected] என்ற இ-மெயில் மூலமாகவோ அல்லது 7395988767 எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவோ அனுப்பித்து அரசியலில் தங்களுக்கான வாய்ப்பினை பிரகாசப்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

விளம்பர காட்சி பகுதி